வெள்ளி, 11 ஏப்ரல், 2014

கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும்:


கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் அது இயங்கத் தொடங்கும் முன்பாகவே கம்ப்யூட்டர் முடங்கிப் போகலாம். ஆனால் முடங்கிப் போவது அனைத்து நேரங்களிலும் நடக்காது. இங்கு சில வழக்கமான எர்ரர் செய்திகளும்அவற்றிற்கான காரணங்களும் இங்கு தரப்படுகின்றன:


1. 
மானிட்டரின் எல்.இ.டி. விளக்கு விட்டு விட்டு எரிகிறது:இதற்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப் போய் இருக்கலாம். மானிட்டர் கேபிள்டேட்டா கேபிள்ராம் மெமரிடிஸ்பிளே கார்ட் மற்றும் சிபியு தொடர்புகளில் பிரச்சினை இருக்கலாம். மேலே கூறிய அனைத்தையும் சரி பார்க்கவும்.

2. 
தொடர்ந்து மூன்று பீப் ஒலி கேட்கிறது: ராம் மெமரி சிப் தொடர்பில் கோளாறு இருக்கலாம். எனவே அவை சரியாக அதன் ஸ்லாட்டில் பொருந்தியுள்ளனவா எனப் பார்க்கவும். மற்ற பிரிவுகளைச் சோதனை செய்கையில் இவை சற்று இடம் பெயர்ந்திருக்கலாம்.

3. 
மூன்று பீப் – ஒன்று நீளமாகஇரண்டு குறைவாக: இந்த ஒலி கிடைத்தால் டிஸ்பிளே கார்டில் பிரச்சினை. இந்த கார்டை ஒரு முறை எடுத்து திரும்ப பொருத்தவும். பிரச்சினை தொடர்ந்தால் இதனை மாற்ற வேண்டிய திருக்கும்.

4. 
மூன்று நீளமான பீப் ஒலி, சம கால இடைவெளியில்: பயாஸ் அல்லது ராம் செட்டிங்ஸ் பிரச்சினை. ராம் சிப் மற்றும் பயாஸ் செட்டிங்ஸ் செக் செய்திடவும்.

5. 
தொடர்ந்த பீப் ஒலி: கீ போர்டு பிரச்சினை. எடுத்துக்காட்டாக உங்கள் விரல்கள் ஏதேனும் தொடர்ந்து ஒரு கீயை அழுத்திக் கொண்டிருக்கலாம்;அல்லது ஏற்கனவே அழுத்தப்பட்ட கீதூசி அல்லது வேறு பிரச்சினையால்மேலே எழாமல் அழுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கலாம்.

6. 
பிளாப்பி டிஸ்க் டிரைவின் எல்.இ.டி. விளக்கு தொடர்ந்து எரிகிறது: டேட்டா கேபிள் மாட்டியதில் சிக்கல் உள்ளது. கேபிள் முறுக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.

7. 
மானிட்டர் திரையில் எந்த டிஸ்பிளேயும் இல்லை: ஹார்ட் டிஸ்க் கேபிள் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது. சரியாகப் பொருத்தவும். அதில் உள்ள சிகப்பு மார்க் பவர் சப்ளையைப் பார்த்து இருக்க வேண்டும். 

8. 
பவர் எல்.இ.டி. எரியவில்லை: மெயின் பவர் வரும் வயர் சரியாகப் பொருந்தி உள்ளதா எனப் பார்க்கவும். எஸ்.எம்.பி.எஸ். சரியாக வேலை செய்கிறதா எனச் சோதிக்கவும். மதர் போர்டுக்கான இணைப்பும் சரியாக இருக்க வேண்டும்.
[size=12]9.CMOS Error [/size]என்று செய்தி வருகிறது: 
மதர் போர்டில் உள்ள 
வோல்ட் பேட்டரியினை மாற்றவும். அதன் ஒரிஜினல் செட்டிங்ஸை நீங்களே கொண்டு வரவும். இதற்கு கம்ப்யூட்டருடன் தரப்பட்ட சீமாஸ் செட் அப் சார்ட் பார்க்கவும். 
[size=12]10. FDD Error [/size]காட்டுகிறது, பிளாப்பி டிரைவ் சரியாகச் செயல்படவில்லை: எப்.டி.டி.யின் பவர் கார்ட்டேட்டா கேபிள் சரியாக அதன் இடத்தில் பொருத்தப்பட்டுள்ளதா என்று பார்க்கவும். சீமாஸ் செட்டிங்ஸ் சரி பார்த்துவிட்டு பிளாப்பி டிரைவும் சரியாக உள்ளதா என்று கவனிக்க வேண்டும்.
11. HDD Error or Hard Disk Failure என்று செய்தி வருகிறது. 
பவர் தரும் கேபிள் சரியாகப் பொருத்தப் பட்டுள்ளதா என்று
 பார்க்கவும். ஒரு முறை எடுத்துஇணைக்கும் இடத்தில் உள்ள தூசியினை நீக்கிப் பொருத்திப் பார்க்கவும். ஹார்ட் டிஸ்க் சரியாகப்பொருத்தப்பட்டுள்ளதனை உறுதி செய்திடவும். ஹார்ட் டிஸ்க்கிற்கான டேட்டா கேபிளையும் ஒரு முறை எடுத்துசுத்தம் செய்து மீண்டும் இணைக்கவும். சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் பாராமீட்டர்கள் சரியாகக் கொடுக்கப்பட்டுள்ளதா எனச் சோதனை செய்திடவும். அல்லது செட்டிங் பார்ட்டிஷனை சோதனை செய்திடவும். இதற்கு எப்டிஸ்க் (FDisk) கட்டளை கொடுத்து பின் ட்ரேக் ஆக பார்மட் செய்திடவும். 

12. 
சரியான மின்சாரம் இல்லாமல் மதர் போர்டு திடீரென முடங்குகிறது: எஸ்.எம்.பி.எஸ். செக் செய்திடவும். அல்லது ராம் மெமரி சரியாக வேலை செய்கிறதா என்பதைச் சோதனை செய்திடவும். உங்கள் சாப்ட்வேர் காப்பி செய்யப்பட்டது என்றால்அதிலிருந்தும் பிரச்சினை ஏற்படலாம். சி.பி.யு. மேல் உள்ள சிறிய விசிறி சரியாகச் செயல்படவில்லை என்றாலும் இந்த எர்ரர் காட்டப்படும்.

13. 
மானிட்டரின் ஸ்கிரீன் காட்சி ஆடுகிறது: டிஸ்பிளே கார்டு சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதைச் சோதிக்கவும். ஏதேனும் வைரஸ் புரோகிராம் உள்ளே புகுந்தும் இந்த வேலையைச் செய்திடலாம். அல்லது வீடியோ மெமரியில் பிரச்சினை இருக்கலாம்.

14. 
திரைக் காட்சி அதிர்கிறது: மானிட்டரைச் சுற்றி ஏதேனும் காந்த அல்லது ரேடியோ அலைகள் உருவாகலாம். 

15. 
சி.பி.யு. கேபினட்டில் லேசாக ஷாக் அடிக்கிறது:கம்ப்யூட்டருக்கான மின் இணைப்பின் எர்த் இணைப்பு சரியில்லாமல் இருக்கலாம். எனவே மெயின் பவர் கேபிளைச் சோதிக்கவும்.
16. Non System Disk Error: : பிளாப்பி டிரைவில் பூட் பண்ண முடியாத வேறு டிஸ்க் இருக்கலாம். அல்லது ஹார்ட் டிஸ்க்கிற்கான சீமாஸ் செட் அப்பில் தவறு இருக்கலாம். ஹார்ட் டிஸ்க்கில் பார்ட்டிஷன் உருவாக்கப்படாமல் இருக்கலாம். ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் பார்மட் செய்யப்படாமல் இருக்கலாம். [size=12]17. Missing Operating System: [/size]சிடம் இயக்குவதற்கான பைல்கள் இல்லாமல் இருக்கலாம் – குறிப்பாக Command.com என்னும் பைல். இதனுடன் [size=12]IO.sys, MS_DOS.sys [/size] ஆகிய பைல்களும் ஒரு சிஸ்டம் இயங்க முதல் தேவைகளாகும். இவை சரியாக உள்ளனவா என்று பார்க்கவும். 
18. Missing Command Interpretor: Command.com பைல் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். அல்லது அழிக்கப் பட்டிருக்கலாம். 
19. IO Error : சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் எந்த வகை என்று தரப்பட்டிருப்பது சரியாக இல்லை. பார்மட்டிங் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் சரியானதல்ல. [size=12]

20.Divide Over Flow 
[/size]
எர்ரர் மெசேஜ்: சில டைரக்டரிகள் அல்லது பைல்கள் கிராஷ் ஆகி இருக்கலாம். [size=12]CHKDSK/F[/size] அல்லதுSCANDISK பயன்படுத்தி அவற்றைச் சரி செய்திடவும். 
21. செயல்படுகையில் ஹார்ட் டிஸ்க்கிலிருந்து
 சத்தம் வருகிறது: சீரான மின்சாரம் தரப்படவில்லை. கேபிள்கள் சரியாகப்பொருத்தப்படவில்லை. ஹார்ட் டிஸ்க்குகளில் ஙு கனக்டர் கேபிள்பொருத்தப்பட்டிருந்தால் எடுத்துவிட்டு சரியான கேபிளைப் பொருத்தவும். ஹார்ட் டிஸ்க் பலவீனமாக இருக்க வேண்டும். அல்லது பெரும் அளவில் பேட் செக்டார்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். 

22. 
ஹார்ட் டிஸ்க் ப்ராசஸ் செய்கையில் முடங்கி நிர்ர்கிர்றது: 
[size=12]CHKDSK/F
[/size]
அல்லது [size=12]SCANDIS[/size] பயன்படுத்தி பேட் செக்டார்களைச் சோதனை செய்திடவும். நிறைய இருந்தால் மீண்டும் ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடவும். 
23. Hard Disk Not Detected: பவர் கனெக்டர்களைச் சோதனை செய்திடவும். டேட்டா கேபிள்களைச் சரி பார்க்கவும். ஜம்ப்பர்களைச் சோதனை செய்திடவும்.
24. ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் காட்டப்படவில்லை: ஹார்ட் டிஸ்க்கை பார்மட் செய்த ஆப்பரேட்டிங் சிஸ்டம்தற்போதுள்ள மதர்போர்டுடன் இணைந்து போகவில்லை. 
25. MMX/DLL FILE MISSING : இந்த பைல்கள் பவர் திடீரென நின்று போனதால் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். எனவே இந்த பைல்களை வேறு ஒரு கம்ப்யூட்டரிலிருந்து காப்பி செய்து இதற்கு மாற்றவும். உங்களுடையது பழைய விண்டோஸ் ௯௮ ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனில் அதனை மீண்டும் இன்ஸ்டால் செய்திடவும்.
பொதுவாக கம்ப்யூட்டர் இயங்காமல் நின்று போய்விட்டால்,உடனே ஒரு பதற்றம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று பல்வேறு விதமாக நாமாகவே எண்ணிக் கொள்வோம். அத்தகைய பதற்றத்தைத் தணிக்கவே இந்த விளக்கம் தரப்பட்டுள்ளது. எனவே பிரச்சினையின் தன்மையைப் புரிந்து கொண்டு,உங்களால் கம்ப்யூட்டர் கேபினைத் திறந்து சரி செய்ய முடியவில்லை என்றால் அதற்கான டெக்னீஷியனை அழைத்து சரி செய்திடவும்.

முதல் 20 இணைய தளங்கள்

முதல் 20 இணைய தளங்கள்


உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் பயனாளர்களைக் கொண்டுள்ள இணைய தளம் எது?
கண்களை மூடிக் கொண்டு கூகுள் (தேடுதளம்) என்று சொல்லி விடுவீர்கள்,
இல்லையா?
அதுதான் இல்லை. அண்மையில் எடுத்த
கணக்கின்படி கூகுள் இணைய தளம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அப்படியானால்
முதல் இடத்தில்? அதுவும் ஓர் அமெரிக்க தளம் தான். இங்கே இந்த வகையில் அதிக
தனிநபர் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள முதல் இருபது இணைய தளங்களை, அதன்
வகையுடனும், தன்மையுடனும் காணலாம். இறுதியில் மேலே உள்ள கேள்விக்கான இணைய
தளத்தையும் காணலாம்.
 
20.Amazon.com:


எலக்ட்ரானிக்ஸ்
சாதனங்கள், உடைகள், விளையாட்டு சாதனங்கள், ஏன் உணவு கூட இங்கு விற்பனை
செய்யப் படுகிறது. இதன் தனி நபர் வாடிக்கையாளர் எண்ணிக்கை 16 கோடியே 30
லட்சம். முதன் முதலில் இது தொடங்கிய போது, பொருட்களைப் பெற்று, பேக்
செய்து அனுப்பும் பணியைத்தான் மேற்கொண்டதாக இருந்தது. தற்போது இதன் இமாலய
வளர்ச்சி, இணைய வர்த்தகத்தின் சிறப்பினைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

19. Sina.com.cn:


மீடியா
மற்றும் பயனாளர்கள் உருவாக்கும் தகவல்களைத் தாங்கித் தரும் சீனநாட்டு
இணைய தளம். 2000 ஆம் ஆண்டு வாக்கில், சீனாவின் யாஹு தளம் என்ற பெயரை இது
பெற்றிருந்தது. 2009ல் Weibo என்ற பெயரில் வலைமனை தளம் ஒன்றையும் இது
தொடங்கியது. இந்த தளத்தில் 40 கோடி பயனாளர்கள் உள்ளனர். சினா டாட் காம் தள
சந்தாதாரர் எண்ணிக்கை 16 கோடியே 90 லட்சம்.

18. WordPress.com:


17 கோடியே 9 லட்சம் பேர் பயன்படுத்தும் வலைமனைத்தளம். மிக எளிமையான வலைமனை சாதனங்களை இலவசமாக வழங்கி, தன்
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை இந்த தளம் பெருக்கிக் கொண்டது.

17. Apple.com:


ஆப்பிள்
சாதனங்கள் மற்றும் அவற்றிற்கான சாப்ட்வேர் புரோகிராம்களுக்கான தனி தளம்.
இவற்றைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்கள் சந்தேகங்களைப்
போக்குவதற்கான தகவல்களைத் தரும் தளமும் கூட. வாடிக்கையாளர் எண்ணிக்கை 17
கோடியே 17 லட்சம்.

16. Sohu.com :


சீன
நாட்டில் இயங்கும் பல்நோக்கு இணைய தளம் மற்றும் தேடல் தளம். 1997 ஆம்
ஆண்டில், சீனாவின் முதல் ஆன்லைன் சர்ச் இஞ்சின் தளமாக இது தொடங்கப்பட்டது.
தொடர்ந்து ஒரு பல்நோக்கு இணைய தளமாகவும், ரியல் எஸ்டேட் இணைய தளமாகவும்
வளர்ந்து, இன்று 17 கோடியே 58 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.

15. Bing.com:


மைக்ரோசாப்ட்
தன்னுடைய இந்த தளம் குறித்து மிக தீவிரமாக விளம்பரம் செய்தது. மிக எளிதாக
தேடலையும் முடிவுகளையும் தரக்கூடிய தளமாக இதனை காட்டி முன்னுக்குக்
கொண்டு வர முயன்றது. அதற்கேற்ற வகையில் நவீன தொழில் நுட்பத்தினையும்
இணைத்தது. இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 18 கோடியே 40 லட்சம்.

14. Twitter.com:


ரியல்
டைம் தொலை தொடர்பினைத் தரும் இணைய தளம். 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட
நாள் முதல், உலகெங்கும் நடக்கும் நிகழ்வுகளை அறிந்து கொள்ள மக்கள் அணுகும்
ஓர் இணைய தளமாக உருவெடுத்துள்ளது. அதற்கேற்ற வகையில், பல நிறுவனங்கள்,
அரசியல் வாதிகள், மக்கள் தலைவர்கள், ஊடக நிறுவனங்கள், தொழில் முனைவர்கள்
ஆகியோர் இதில் தகவல்களைத் தருகின்றனர். இதன் சந்தாதாரர் எண்ணிக்கை 18
கோடியே 98 லட்சம்.

13.Taobao.com:


20
கோடியே 70 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டது. eBay, Amazon போல மிகப் பெரிய
வர்த்தக இணைய தளம். இதன் உரிமையாளரான Alibaba.com, இதனை எந்தக் கட்டணமும்
இல்லாத தளமாகக் கொண்டு வந்த நாள் முதல், இது தொடர்ந்து பெரிய அளவில்
வர்த்தகம் மேற்கொள்ளும் தளமாக உள்ளது.

12. Ask.com:


21
கோடியே 84 லட்சம் பேர் இதன் வாடிக்கையாளர்கள். கூகுள் இதன் பின்னணியில்
உள்ளது. இது முதலில் தொடங்கும்போது Askjeeves.com என இருந்தது. பின்னர்
மாற்றங்களை அடைந்தது.

11. Blogger.com:


மிகச்
சிறிய நிறுவனமாகத் தொடங்கப்பட்ட, இந்நிறுவனம், இணைய தளங்கள் சரிவைச்
சந்தித்த போது, தள்ளாடியது. பின்னர், 2002ல், கூகுள் இதனை மேற்கொண்டு
தற்போது உயரக் கொண்டு வந்துள்ளது. வலைமனை அமைப்பாளர்கள் அதிகம் நாடும் தளம்
இதுதான். 22 கோடியே 99 லட்சம் பேர் இதன் வாடிக்கையாளர்கள்.

10. MSN.com:


மைக்ரோசாப்ட்
நிறுவனம் கொண்டுள்ள இணைய வசதிகளில் இதுவும் ஒன்று. இணைய சேவை நிறுவனமாகத்
தொடங்கப்பட்டு, ஹாட்மெயில், எம்.எஸ். என். மெசஞ்சர் ஆகியவற்றைக் கொண்
டுள்ளது. போர்டல் தளமாக இயங்குகிறது. இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 25
கோடியே 41 லட்சம்.

9. Baidu.com:


வெப்சைட்,
ஆடியோ பைல்கள், இமேஜஸ் ஆகியவற்றைத் தேடிப் பெற சீனா கொண்டுள்ள இணைய தளம்
இது. ஆயிரக்கணக்கான சீனப் பொறியாளர்கள், தொடர்ந்து இதன் தகவல்களை அப்டேட்
செய்து வருகின்றனர். இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 26 கோடியே 87 லட்சம்.

8. Micorosoft.com:


கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் அறிந்த தளம். இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 27 கோடியே 17 லட்சம்.

7. QQ,com:


சீனாவில்
இயங்கும் தேடல் இணைய தளம் மற்றும் தகவல் களஞ்சிய தளம். இதனை உருவாக்கியது
Tancent என்ற சீன நிறுவனம். இன்ஸ்டன்ட் மெசேஜ் சேவையில் இது சீனாவில்
முதல் நிலைத் தளமாக உள்ளது. இந்த வகையில் 70 கோடி பேர் தனது வாடிக்கையாளர்
என இத்தளம் குறிப்பிட்டுள்ளது. Qzone and the Tencent Weibo blog என
இதனுடையை இரண்டு தளங்களும் சீனாவில் புகழ் பெற்றவை. இந்த தளத்தின்
வாடிக்கையாளர்கள் 28 கோடியே 41 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

6. Live.com:


மைக்ரோசாப்ட்
நிறுவனத்தின் புதிய இமெயில் தளம். அவுட்லுக் மற்றும் ஹாட் மெயில் தளங்களை
ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டது. இதன் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை 38
கோடியே 95 லட்சம்.

5. Wikipedia.org:


46
கோடியே 96 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டது. இலவசக் கலைக் களஞ்சியமாக
இயங்கி வருகிறது. யார் வேண்டுமானாலும், இதில் தகவல்களை ஏற்றலாம்.
இருப்பவற்றை எடிட் செய்திடலாம். இந்த தளத்திற்கு அதிகம் வருபவர்கள், கூகுள்
தளத்தைத் தேடுபவர்களாகவே உள்ளனர்.

4. Yahoo.com:


இணைய
பல்நோக்கு தளங்களில் முன்னோடியானது இந்த தளம். தேடல் சாதனமாகவும் இணைய
போர்டல் தளமாகவும் செயல்படுகிறது. இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 46
கோடியே 99 லட்சம்.

3. Youtube.com:


பயனாளர்கள்
உருவாக்கிய வீடியோ காட்சிகளைப் பகிர்ந்து கொள்ள, பார்த்து ரசிக்க இது ஓர்
அருமையான தளமாகப் பல்லாண்டுகள் இயங்கி வருகிறது. 2006ல் இதனை கூகுள்
நிறுவனம் தனதாக்கிக் கொண்டு, தொடர்ந்து பல வசதிகளை அளித்து வருகிறது. இதன்
தனி நபர் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 72 கோடியே 19 லட்சம்.

2. Google.com:


78
கோடியே 28 லட்சம் பேரைத் தன் வாடிக்கையாளர்களாகக் கொண்ட இந்த தேடுதல்
தளம், இவ்வகையில் இன்று உலகின் முதல் இடம் பெற்ற தளமாக உள்ளது. ஜிமெயில்,
ஜிமேப்ஸ், கூகுள் ப்ளஸ், கூகுள் மெயில் என இணையத்தில் இயங்கும் அனைவரையும்
ஏதாவது ஒரு வகையில் இழுத்துப் போட்டு வைத்துக் கொள்கிறது.

1. Facebook.com:


இந்தக்
கட்டுரையின் தொடக்கத்தில் கேட்ட கேள்விக்கான பதில் இங்கே உள்ளது.
பேஸ்புக் தளம் தான், உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கையில் தனிநபர்
வாடிக்கையாளர்களைக் கொண்டதாக இயங்கி வருகிறது. இந்த சமூக இணைய தளத்தின்
மூலம், உங்கள் நண்பர்கள் அனைவரையும் உடனுடக்குடன் தொடர்பு கொண்டு
தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம். முதன் முதலில் ஹார்வேர்ட் பல்கலைக் கழக
மாணவர்களுக்கு மட்டும் எனத் தொடங்கப்பட்ட இந்த சமூக தளம் இன்று உலகின்
அனைத்து நாடுகளிலிருந்தும் நண்பர்களைக் கொண்ட தளமாக இயங்குகிறது.

மொபைலில் மென்பொருள் டவுன்லோட் செய்வது எப்படி?



இப்போது மொபைலில் புதுமையான மற்றும் வித்யாஷமான சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ண வேண்டுமானால், கிளிக்செய்யுங்கள்.அதில்
தேடல் கருவியில் உங்களுடைய மொபைல் மாடல் எண்ணை கொடுத்து தேடுங்கள்.அனைத்து
வகையான மொபைலிற்கும்,சாப்ட்வேர் இதில் உள்ளது.


இப்போது நோக்கியா மொபைலிற்கான சாப்ட்வேர் வேறு இணைப்பிலும் கிடைக்கும்.அதனை பார்க்க வேண்டுமானால்,கிளிக் செய்யுங்கள்

மொபைலுக்கு காசினால் சார்ச் ஏற்றுவது எவ்வாறு?

மொபைலுக்கு காசினால் சார்ச் ஏற்றுவது எவ்வாறு?


ஒருவருக்கு
இதயம் இருக்கிறதோ இல்லையோ அவரிடம் கட்டாயம் ஒரு கைப்பேசி இருக்கும்.
அந்தளவுக்கு கைப்பேசி என்பது ஒரு அத்தியாவசியப் பொருளாகிவிட்டது.சில வேளை
வெளியிடம் செல்கையில் கைப்பேசியை மின்னேற்றம் செய்வதை மறந்து சென்று விட்டு
அங்கிருந்து அவசரத்திற்குக் கதைப்பதற்காக முழிப்போம்.






(முதலிலேயே சொல்லிக் கொள்கிறேன் இது ஒரு விஞ்ஞானக் கண்டபிடிப்பல்ல) இதற்கு
முக்கிய நிபந்தனை உங்கள் கைப்பேசி மின் போதாதெனச் சொல்லி நிற்றல்
வேண்டும். நீங்கள் ஒரு தாள் காசை எடுத்துக் கொள்ளுங்கள் (இங்கு இதற்கும்
ஒன்று சொல்வார்கள் 10 ரூபாய் தாளில் செய்தால் தான் மின் ஏறுமாம்) பின்
அக்கா
சை
படத்திலுள்ளவாறு புனல் போல் சுருட்டிக் கொள்ளுங்கள். பின்னர் தங்கள்
கைப்பேசியின் உறையை கழற்றிக் கொள்ளுங்கள். அத்துடன் மின்கலத்தையும் நீக்கிய
பின் அந்த மின் கலத்துடன் தொடபில் இருக்கும் மின் கம்பிகளை அடையாளம் கண்டு
கொள்ளுங்கள். அதன் நடுக் கம்பியை
தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்









இப்போது
படத்திலுள்ளவாறு தாங்கள் சுருட்டிய காசை நடுக்கம்பியினுள் சற்று உட்
செலுத்தி வையுங்கள் (இழுக்கக் கூடியவாறு). பின்னர் வழமை போல் மின் கலத்தை
செருகுங்கள். இப்பொது எல்லாம் தயார் சடுதியாக (ஒரு கணநேரத்திற்குள்) தாளை
இழுங்கள். சரி விசயம் முடிந்த விட்டது. இப்பொது தற்கொலை செய்து கொண்ட
கைப்பேசிக்கு உயிர் கொடுங்கள். இரண்டு புள்ளிகளுக்கு மேல்
உயர்ந்திருக்கும். இதுவே NOKIA ரக கைப்பேசியாக இருந்தால் இன்னும் நல்ல
விளைவை எதிர் பார்க்கலாம்.




அடுத்த
விடயம் என்னவென்றால் இதற்கான காரணமாக நான் கருதுவது. உராய்வால் வரும்
இலத்திரன் பாய்ச்சலாகும். ஏனெனில் இலத்திரன் மறை ஏற்றம் (-) கொண்டது.
நாங்கள் செருகும் பகுதி நேர் எற்றம் (+) கொண்டது. இரண்டுக்குமிடையேயான
தொடர்பு தான் இதற்கு காரணமாக இருக்கலாம் என நான் நினைக்கிறேன் அனால்
நண்பர்கள் வெவ்வெறு காரணம் சொல்கிறார்கள். என் வாசகர் வட்டத்தில் பல விசயம்
தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும் அவர்களில் யாராவது
தமக்குத் தெரிந்ததை என்னுடன் பகிருங்கள்.