துணிகளில் படிந்துள்ள
மெஹந்தி கறைகளை நீக்க சில டிப்ஸ
துணிகளில் படிந்துள்ள
மெஹந்தி கறைகளை நீக்க சில டிப்ஸ்...
முறை: 1
மெஹந்தியானது துணியில்
பட்டால், உடனே ஈரமான துணி கொண்டு துடைக்க
வேண்டும். குறிப்பாக தேய்த்து விடாதீர்கள்.
முறை:2
துணிகளில்
படிந்துள்ள மெஹந்தி கறைகளை நீக்க, சோப்பு கொண்டு கறை படிந்துள்ள இடத்தில் வட்டமாக, கறை போகும் வரை தேய்த்து, குளிர்ச்சியான நீரில் அலச வேண்டும். இந்த முறையை கறை நீங்கும் வரை
செய்யவும். வேண்டுமெனில், வீட்டில் பழைய டூத் பிரஷ் இருந்தால், அதனைப் பயன்படுத்தி தேய்த்தாலும், மெஹந்தி கறைகள் நீங்கிவிடும்.
முறை: 3
பால் கொண்டும்
மெஹந்தி கறைகளைப் போக்கலாம். அதற்கு கறை படிந்த துணியை பாலில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் அதனை சோப்பு கொண்டு வட்ட வடிவில்
தேய்க்க வேண்டும்.
ஒருவேளை நீங்கா கறை போல் படிந்திருந்தால்,
அந்த கறை போகும் வரை இந்த முறையை திரும்ப
செய்யலாம்.
முறை: 4
மெஹந்தி கறை
படிந்த இடத்தின் மேல், ஒரு துளி ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஊற்றி தேய்த்தால், கறை உடனே போய்விடும். ஆனால் ஹைட்ரஜன் பெராக்ஸைடு துணியை ப்ளீச் செய்துவிடும். ஆகவே அளவுக்கு அதிகமாக
பயன்படுத்த வேண்டாம்
முறை: 5
வினிகர் கூட
மெஹந்தி கறையைப் போக்குவதில் சிறந்தது. அதற்கு வெள்ளை வினிகரை கறை படிந்த இடத்தில் ஊற்றி தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.
நீங்கா கறையாக
இருந்தால், இந்த முறையை கறை மங்கும் வரை செய்ய
வேண்டும். குறிப்பாக,
மேற்கூறியவற்றை
மெஹந்தி படிந்த உடனே செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக